சோல், பிப்.24-
தென்கொரியாவில் மக்கள் தொகை குறைந்து வருவதன் காரணமாக கிட்டத்தட்ட 50 பள்ளிகளை மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் தங்கள் இருப்பதாக அந்நாட்டின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ஜின் சுன் மீக்கு வழங்கப்பட்ட கல்வி அமைச்சின் தரவுகளின்படி , மூடப்படவிருக்கும் பள்ளிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சோலுக்கு அப்பாற்பட்ட நிலையில் 17 நகரங்களில் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் பெரும் சரிவு மற்றும் புதிய கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் அறவே மாணவர்கள் சேராதது முதலிய காரணங்களினால் இப்பள்ளிகள் மூடப்படவிருப்பதாக அந்நாட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.