காஜாங், பிப்.24-
கடந்த வாரம் காஜாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் தனது கணவரைக் கொலை செய்ததாக 59 வயதுடைய மாது ஒருவர் காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஹெயு பி லீ என்ற அந்த மாது, கடந்த கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தனது அடுக்குமாடி வீட்டில் 61 வயதுடைய தனது கணவர் வொங் சீ மின் என்பவரை கொலை செய்ததாக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பாட்டார்.
இக்கொலை வழக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் பட்சத்தில் அந்த மாதுவிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மாது கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.