இருப்புப் பாதையில் பழுதடைந்த காரை ரயில் மோதியது

சபா, பிப்.24-

ரயில் இருப்புப் பாதையில் சிக்கிய ஆசிரியர் ஒருவரின் பழுதடைந்த காரை, ரயில் மோதித் தள்ளியது.

இருப்புப் பாதையில் சிக்கிய தனது காரை அகற்றுவதற்கு அந்த ஆசிரியர் கடுமையாகப் போராடியும், முடியாமல், ரயில் வருவதைக் கண்டு காரை விட்டு வெளியேறினார்.

அடுத்த சில வினாடிகளில் அந்த ஆசிரியரின் கண் முன்னே அவரின் காரை ரயில் மோதித் தள்ளியது. இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் சபா, Beaufort, Kampung Halogilat-டில் நிகழ்ந்தது.

இதில் 43 வயது ஆசிரியர் உயிர் தப்பிய வேளையில் அவரின் Toyota Vios கார் சேதமுற்றதாக Beaufort, மாவட்ட போலீஸ் தலைவர் Wong Leong Meng தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS