ஈப்போ, பிப்.24-
தாப்பா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி காலியாக விட்டதாக பேரா மாநில அம்னோ, சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பும் என்று மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சராணி முகமட் தெரிவித்தார்.
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷ்சாம் ஷாருடின், கடந்த சனிக்கிழமை காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த சட்டமன்றத் தொகுதி காலியாகிவிட்டதாக பேரா மாநில சட்டமன்ற சபா நாயகர் டத்தோ முகமட் ஸாகிர் அப்துல் காலிட்டுக்கு கடிதம் அனுப்பப்படும் என்று பேரா மாநில அம்னோ தொடர்புக்குழுவின் தலைவருமான சராணி முகமட் குறிப்பிட்டார்.
இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சபா நாயகர் மூலம் தேர்தல் ஆணையத்திடம் தெரியப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.