கோலாலம்பூர், பிப்.24-
கோலாலம்பூர், வங்சா மாஜூ செக்ஷன் 2, புளோக் G9 வீடமைப்புப்பகுதியில் மரம் ஒன்று விழுந்ததில் 9 கார்கள் மற்றும் 8 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
இச்சம்பவம் குறித்து நேற்றிரவு மணி 11.43 அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகக் கோலாலம்பூர் பொது தற்காப்புத்துறையின் அதிகாரி அகமட் ஜூனைடி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த பொது தற்காப்புத் துறையின் உறுப்பினர்கள், வாகனங்களின் மீது விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.