ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் பிரதோஷ அபிஷேகம்

சிரம்பான், பிப்.24-

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபார் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வர் தேவஸ்தான திருக்கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு நாளை பிப்ரவரி 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.31 மணிக்கு பிரதோஷ அபிஷேகமும், பிரதோஷ நாயகர் வலம் வருதல் மற்றும் அதிகார நந்தி பகவானுக்கு அபிஷேகமும் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

ஆலயத்தின் பிரதான குருக்கள் புவிதர்ஷன் முன்னிலையில் தமிழ்நாடு, திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிய சுவாமிகள் தலைமையில் பிரதோஷம் நடைபெறவிருக்கிறது.

தமது மலேசிய வருகையின் போது, சிரம்பான், ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் திருக்கோயிலுக்கு தேவஸ்தானம் என்ற உயரிய கெளரவத்தையும் தவத்திரு ஸ்ரீ மத் சிவாக்கர தேசிய சுவாமிகள் வழங்கி சிறப்பு செய்துள்ளார்.

தவத்திரு ஸ்ரீ மத் சிவாக்கர தேசிய சுவாமிகள் தலைமையில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் அடியார் பெருமக்கள் திரளாக வருகை தந்து, இறைவனின் திருவருள் பெற்று இன்புயுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். மேல் விபரங்களுக்கு 017-3225400.

WATCH OUR LATEST NEWS