கோலாலம்பூர், பிப்.24-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் நான்கு மூத்த அதிகாரிகளிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.
ரொக்கப்பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதன் தொடர்பில் மேலும் சில சாட்சிகள் அழைக்கப்படலாம் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
லஞ்ச ஊழல் தொடர்பில் இஸ்மாயில் சப்ரியின் நான்கு அதிகாரிகள் SPRM- மினால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
அவர்களை ஐந்து நாள் வரையில் தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.