கோலாலம்பூர், பிப்.25-
11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான MH 370 விமானத்தை தேடுவதற்கு முன் வந்துள்ள கடலாய்வில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான Ocean Infinity- யுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு மலேசியா கொண்டுள்ள இணக்க நிலை, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
எனினும் இங்கிலாந்தைத் தளமாக கொண்ட Ocean Infinity- நிறுவனம் 239 பேருடன் காணாமல் போன அந்த மலேசிய விமானத்தைத் தேடும் பணியை இந்திய பெருங்கடலில் நேற்று தொடங்கியுள்ளதாக பிரிட்டிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் அந்த நிறுவனத்தின் இந்த முயற்சியைத் தாங்கள் வரவேற்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார். அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு சட்டத்துறை அலுவலகத்தின் அனுமதி கிடைத்து விட்டது. தற்போது ஒப்பந்தம் இறுதி கட்ட நிலையில் இருப்பதாக அந்தோணி லோக் விளக்கினார்.