புத்ராஜெயா, பிப்.25-
வரும் மார்ச் முதல் தேதியிலிருந்து 10 கிலோ உள்ளூர் பச்சரிசி 26 ரிங்கிட்டிற்கு விற்கப்படும் என்று விவசாய மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சின் நெல் மற்றும் அரிசி கண்காணிப்புப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ பட்ரூல் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
மார்ச் முதல் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 6 மாத காலத்திற்கு 10 கிலோ பச்சரிசி விலை 26 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்படும்.
நாடு முழுவதும் வறிய நிலையில் உள்ள 77 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் பேரை இலக்காகக் கொண்டு இவ்விலை நிலை நிறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.