தூக்குத் தண்டனையை ஒத்தி வைப்பதற்கு சிங்கப்பூர் அதிபர் அனுமதி

கோலாலம்பூர், பிப்.25-

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக நாளை புதன்கிழமை அதிகாலையில் சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்படவிருந்த ஒரு மலேசியப் பிரஜையான ஹம்சா இம்ராஹிமின் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைப்பதற்கு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இன்று அனுமதி அளித்தார்.

தனது முன்னாள் கட்சிக்காரருக்காக மனித உரிமை போராட்டவாதியான வழக்கறிஞர் எம். ரவி, சிங்கப்பூர் அதிபருக்கு நேற்று அனுப்பி வைத்த கோரிக்கை மனுவிற்கு அதிபர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

அந்த மலேசியப் பிரஜையின் தூக்குத் தண்டனையை ஒத்தி வைப்பதற்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் அனுமதி அளித்து இருப்பதாக கடிதம் வாயிலாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS