ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் பிரதோஷ அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

சிரம்பான், பிப்.25-

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபார் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வர் தேவஸ்தான திருக்கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு இன்று பிற்பகல் 3.31 மணிக்கு பிரதோஷ அபிஷேகமும், பிரதோஷ நாயகர் வலம் வருதல் மற்றும் அதிகார நந்தி பகவானுக்கு அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதான குருக்கள் புவிதர்ஷன் முன்னிலையில் தமிழ்நாடு, திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிய சுவாமிகள் தலைமையில் பிரதோஷம் நடைபெற்றது.

பிரதோஷ நிகழ்வில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று திங்கட்கிழமை ஆலயத்தில் கண் திஷ்டியை நீக்கும் கண்ணாடி பொருத்தும் நிகழ்வு, சுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு, கோயம்புத்தூர், அனுவாவி அகஸ்தியர் ஆலயத்தை சேர்ந்த தவத்திரு குமரசாமி சித்தர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நாளை புதன்கிழமை இரவு 7.01 மணிக்கு மகா சிவராத்திரி விரத பூஜை சிறப்பு வழிபாடு தொடங்குகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு யாகத்தல் பூஜிக்கப்படும் சங்குகளை 25 ரிங்கிட் செலுத்தி பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

சிவபெருமானின் அடையாளப் பிரதிப்பலிப்பாகத் திகழும் பஞ்சலோக சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பாலபிஷேகம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர். சிவராத்திரி வழிபாட்டில் அடியார் பெரு மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர். மேல் விபரங்களுக்கு 017-3225400.

WATCH OUR LATEST NEWS