ஸ்கூடாய், பிப்.25-
ஜோகூர், ஸ்கூடாய், ஜாலான் கெமிலாங் உத்தாமா, தாமான் புகிட் கெமிலாங்கில் வீற்றிருக்கும் அருள்மிகு அஷ்ட சிவ லிங்கேஸ்வர ஆலயத்தில் நாளை பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை மகா சிவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாகத் தொடங்கவிருக்கிறது.
பக்த பெருமக்கள் அனைவரும் இந்த உற்சவ துவக்க பூஜை மற்றும் மகா சிவராத்திரி சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்டு, ஸ்ரீ அஷ்ட சிவ லிங்கேஸ்வரர் அருளைப் பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.