கெமாமான், பிப்.26-
திரெங்கானு, கெமாமானின் உள்ள ஒரு சந்தையில் மாற்றுத் திறனாளி ஒருவரை ஈவுயிரக்கமின்றி கண்மூடித்தனமாகத் தாக்கிய ஐந்து நபர்களுக்கு கெமாமான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தலா 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
மேலும் ஒருவர், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். குற்றவியல் சட்டம் 323 ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த ஐவர், தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
கெமாமான் சந்தையில் மழை நேரத்தின் போது ஒரு சிறு அங்காடி கடையைத் தவறுதலாக மோதிவிட்டார் என்பதற்காக அந்த மாற்றுத் திறனாளியை அங்குள்ள சில நபர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கும் காட்சியை சித்திரிக்கும் காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த மாற்றுத் திறனாளியை மூன்று நான்கு பேர், தரையில் இழுத்துக் கொண்டு வந்தது மற்றும் அவரை கண்மூடித்தனமாகத் தாக்கிய செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.