39.5 விழுக்காட்டினர் மன உளைச்சலினால் அவதி

கோலாலம்பூர், பிப்.26-

மலேசியாவில் கிட்டத்தட்ட 39.5 விழுக்காட்டினர், நிம்மதியைத் தொலைத்தவர்களாக பெரும் மன உளைச்சலினால் அவதியுற்று வருகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

MyMinda மனநல பரிசோதனை மையம் நடத்திய ஆய்வில் இந்த புள்ளி விவரங்கள் தெரியவந்துள்ளதாக டாக்டர் சுல்கிப்ளி குறிப்பிட்டார். இந்த ஆய்வு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி, இவ்வாண்டு ஜனவரி 23 ஆம் தேதி நிறைவுபெற்றது.

Talian Heak Line-னில் நிறைய பேர் தங்கள் மன நலம் குறித்து விவாதித்துள்ளனர். மன உளைச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மன நல நல்லுரைகள் வழங்கப்பட்டு வருவதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS