சொக்சோ சந்தாதாரர்கள், முன்பணத்தைச் செலுத்தாமலேயே 1,448 பேனல் கிளினிக்குகளில் இலவச சிகிச்சை

பெலாபூஹான் கிளாங், பிப்.26-

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ சந்தாதாரர்கள், வேலை நேரத்தின் போது, விபத்துக்கு ஆளாகுவார்களேயானால் சொக்சோ பேனலில் இடம் பெற்றுள்ள 1,448 கிளினிக்குகளில் சொந்தப் பணத்தை வெளியாக்காமலேயே இலவசமாக அடிப்படைச் சிகிச்சையைப் பெற முடியும். இந்த புதிய விதிமுறை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

பணி நேரத்தின் போது விபத்துக்குள்ளாகும் சந்தாதாரர்களின் மருத்துவச் செலவினச் சிரமத்தை குறைக்கும் பொருட்டு சொக்சோ அறிமுகப்படுத்தியுள்ள RBK எனப்படும் வேலை இடர் சிகிச்சைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளில் இதுவும் ஒன்றாகும் என்று சொக்சோ வாரியத் தலைவர் டத்தோஶ்ரீ சுபாஹான் கமால் தெரிவித்தார்.

சொக்சோ பேனல் கிளினிற்குச் செல்லும் சந்தாதாரர்கள் முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. மாறாக, தாங்கள் சொக்சோ சந்தாரார் என்பதை உறுதி செய்வதற்கு அடையாளக் கார்ட்டை காட்டினாலேயே போதுமானதாகும். அவர்களுக்கு அடிப்படை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று டத்தோஶ்ரீ சுபாஹான் அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS