அலோர் ஸ்டார், பிப்.26-
16 வயது இளைஞரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக Ustaz ஒருவர், அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 31 வயதுடைய அந்த Ustaz, நீதிபதி என். பிரிசில்லா ஹேமாமாலினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 22 அம் தேதி கெடா, கோத்தா ஸ்டார், ஜாலான் தண்டோப் உத்தாமாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் Ustaz இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்த Ustaz, தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.