பாலத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு, மாது மரணம்

பெட்டாலிங் ஜெயா, பிப்.26-

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாது ஒருவர், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, கார் ஒன்றுடன் உரசியப்படி மேம்பால தடுப்பு சுவரில் மோதி, விபத்துக்குள்ளானதில் 30 மீட்டர் உயரத்திலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டதில் பரிதாபமாக மாண்டார்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.50 மணியளவில் டமான்சாரா – ஷா ஆலாம் DASH நெடுஞ்சாலையின் 0.7 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.


உள்ளூர்வாசியான 30 வயது மதிக்கத்தக்க அந்த மாது கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாபார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS