மிசியின் கெசுமா ஆதரவில் பொருட்கள் எடை தூக்கும் வாகன பயிற்சி

நீலாய், பிப்.27-

பாரந்தூக்கி இயந்திர வாகனமான போர்க்லிஃப்ட் பயிற்சி, MISI –யின் (மிசியின்) ஆதரவில் Bandar Enstek -கில் வெற்றிகரமாக நடந்தேறியது.

தொழில் சார்ந்த துறைகளில் அதிகம் பயன் படுத்தும் எடை தூக்கும் இயந்திரமான போர்க்லிஃப்ட்பைப் பயன்படுத்தும் முறை மற்றும் அவ்வியந்திரங்களைக் கையாளும் முறைகளை பற்றிய பயிற்சி, மனிதவள அமைச்சினால் நடத்தப்பட்டது.

தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், அதில் கைத்தேர்ந்தவர்களாக தங்களை உருமாற்றிக் கொள்ளவும் இந்திய இளைய தலைமுறையினருக்கு நடத்தப்பட்ட இந்த மூன்று நாள் பயிற்சியில் பலர் மிக ஆர்வமாக கலந்து கொண்டு, வெற்றிகரமாக நற்சான்றிதழையும் பெற்றனர்.

மனிதவள அமைச்சர் Steaven Sim-மின் தூர நோக்கு திட்டத்தின் அடிப்படையில் இந்திய இளைஞர்கள் தனி திறன் கொண்டவர்களாக உயர வேண்டும் என்பது அவரின் அவாவாகும்.

அமைச்சரின் தூர நோக்கு லட்சியத்திற்கு ஏற்ப இந்திய திறன் முன்னெடுப்பு அமைப்பான MISI-யின் மூலமாக இந்திய இளைஞர்களைத் திரட்டி, இது போன்ற பலதரப்பட்ட பயிற்சிகள் நாடு தழுவிய நிலையில் ஆங்காங்கே நடத்தப்படுவதற்கு தற்போது முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த போர்க்லிஃப்ட் பயிற்சியில் 59 இந்திய இளைஞர்கள் கலந்துகொண்டு நன்மை பெற்றனர். இது போன்ற பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்மாக உள்ள இளைஞர்கள் MisiKesuma அகப்பக்கத்தை வலம் வரலாம்.

WATCH OUR LATEST NEWS