கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை தொடர்பில் உண்மையை வெளியிட்ட விஜய் யேசுதாஸ்

தென்னிந்திய பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார். பாடகர் யேசுதாஸுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் தகவல் வெளியாகியிருந்தன. பலரும் யேசுதாஸ் விரைவில் நலமடைய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்துள்ள நிலையில் யேசுதாஸ் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தனது தந்தை யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்றும், அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS