ஜார்ஜ்டவுன், பிப்.27-
பணியிடத்தில் பெண் நோயாளியிடம் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பினாங்கு, ஜார்ஜ்டவுன், மருத்துவமனை ஒன்றில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் ஓர் அரசாங்கப் பணியாளரான 43 வயது மருத்துவர் நேற்று இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்தாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையிலிருந்து கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் அந்த மருத்துவ அதிகாரி கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த ஆண் மருத்துவர் வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக அப்துல் ரசாக் தெரிவித்தார்.
20 வயது மதிக்கத் தக்க பெண் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போது அந்த மருத்துவர் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.