இஸ்மாயில் சப்ரி உதவியாளர்கள் விவகாரம்: மேலும் எட்டு சாட்சிகள் அழைக்கப்படுவர்

ஷா ஆலாம், பிப்.27-

அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் கள்ளப்பணம் மாற்றம் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் 4 முன்னாள் மூத்த உதவியாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக மேலும் எட்டு சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அனைத்து சாட்சிகளும் இந்த வாரத்திலும், அடுத்த வாரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்படுவர். அதேவேளையில் நால்வரிடமிருந்து எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்த அனைத்து ஆவணங்களும் தற்போது சட்டவிரோத பணமாற்று சட்டமான AMLA- வின் கீழ் ஆராயப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

இந்த கைது நடவடிக்கையின் போது இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் அதிகாரிகளில் ஒருவரின் வீட்டிலிருந்து 100 மில்லியன் ரிங்கிட்டை எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்துள்ளது.

இந்த விசாரணையின் போது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, விசாரணைக்கு அழைக்கப்படுவாரா? என்று கேட்ட போது, அது குறித்து கருத்துரைக்க அஸாம் பாக்கி மறுத்து விட்டார்.

WATCH OUR LATEST NEWS