அம்பாங், பிப்.27-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மைத்துனியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இராணுவ வீரர் ஒருவர் அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
26 வயது அந்த இராணுவ வீரர், நீதிபதி Nurulzwam Ahmad Zubir முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் ஜுலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கோம்பாங், ஜாலான் கெர்டாஸில் உள்ள ஒரு வீட்டில் தனது 12 வயது மைத்துனியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.