கிள்ளான், பிப்.27-
கடந்த திங்கட்கிழமை, கிள்ளான், கம்போங் புக்கிட் கூடா, ஜாலான் பத்து 3 வில் மரம் விழுந்து, உணவு வியாபாரி ஒருவர் மரணமுற்றது தொடர்பில் காப்புறுதி நிறுவனம் வழங்க முன்வந்த இழப்பீட்டுத் தொகையில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அதிருப்தி கொண்டிருப்பார்களேயானால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்று ஆலோசனைக் கூறப்பட்டுள்ளது.
45 வயது Aazehari Ansar மரணம் தொடர்பில் காப்புறுதி நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவரின் மனைவி இன்னமும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.
இழப்பீட்டுத் தொகையில் அதிருப்தி இருந்தால் நியாயமான இழப்பீட்டைப் பெறுவதற்கு அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்று கிள்ளான் மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹாமிட் தெரிவித்துள்ளார்.