பூச்சோங், பிப்.28-
ஜாலான் பூச்சோங், கின்ராராவிலிருந்து பூச்சோங் IOI ஐ நோக்கி செல்லும் புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் இன்று காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாதசாரி ஒருவர், லோரி மோதி, அதன் சக்கரத்தில் அரைப்பட்டு பரிதாபமாக மாண்டார்.
இவ்விபத்து குறித்து காலை 8.50 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
தீயணைப்பு மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, லோரியின் சக்கரத்திற்கு அடியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார் என்று அவர் குறிப்பிட்டார்.
இடிபாடுகளிலிருந்து சடலம் மீட்கப்பட்டு, சுகாதாரப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.