போதைப்பொருள் கிடங்காகப் பயன்படுத்தப்பட்ட கொண்டோமினியம் வீடு கண்டு பிடிப்பு

ஜோகூர் பாரு, பிப்.28-

ஜோகூர் பாருவில் வேலியிடப்பட்ட ஒரு கொண்டோமினியம் அடுக்கு மாடி வீடு, போதைப்பொருள் மறைத்து வைக்கப்படும் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அந்த ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் உள்ளூரைச் சேர்ந்த 39 வயது நபர் கைது செய்யப்பட்டார். அந்த வீடு உட்பட 4 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 25 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 15 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 51 ஆயிரத்து 777 போதைப் பித்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாக அறியப்படுகிறது என்று ஜோகூர் பாருவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS