நீலாய், மார்ச்.01-
அஞ்சல் கடித பட்டுவாடா கார்கோ விமான நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர், கார் – லோரி சம்பந்தப்பட்ட விபத்தில் பலியானார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 6.55 மணியளவில் நீலாய், ஜாலான் பெர்சியாரான் நெகிரி, Nilai Aurelius மருத்துவமனை அருகில் நிகழ்ந்தது.
இதில் பெரோடுவா அல்ஸா காரில் பயணம் செய்த 26 வயது கார்கோ நிறுவன பணியாளர், வலப்புறத் தடத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
கார், சாலையை விட்டு விலகி மின் கம்பத்தை மோதி, மீண்டும் சாலை நடுவே வந்த போது லோரியினால் மோதப்பட்டார்.
இதில் 26 வயது கார்கோ பணியாளர், கடுங்காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.