கோலாலம்பூர், மார்ச்.01-
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், லாலாபோர்ட் பேரங்காடியில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்த அடிதடி சண்டை தொடர்பில் போலீசார் 11 பேரை கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்கள் பிரபலங்கள் சம்பந்தப்பட்ட குத்துச்சண்டை போட்டிக்குப் பின்னர் இந்த கலவரம் நடந்துள்ளது. அன்று நள்ளிரவு 12.45 மணியளவில் கிடைக்கப் பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபண்டி சுலைமான் தெரிவித்தார்.
பிடிபட்ட அனைவரும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.