வாகனப்பட்டறை தீ விபத்தில் இருவருக்கு தீக்காயங்கள்

கிள்ளான், மார்ச்.01-

கிள்ளான், ஜாலான் சுங்கை பூலோ 5 இல் மூன்று மாடி கட்டட வரிசையில் செயல்பட்டு வந்த வாகனப் பட்டறை தீயில் அழிந்தது.

இன்று மாலை 4.50 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இருவர் தீக் காயங்களுக்கு ஆளானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

பழுது பார்ப்பதற்காக பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மூன்று கார்கள் தீயில் அழிந்தாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS