ஸ்கூடாய், மார்ச்.01-
ஜோகூர், ஸ்கூடாய், ஜாலான் கெமிலாங் உத்தாமா, தாமான் புகிட் கெமிலாங்கில் வீற்றிருக்கும் அருள்மிகு அஷ்ட சிவ லிங்கேஸ்வர ஆலயத்தில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை மகா சிவராத்திரி உற்வசம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பக்த பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ அஷ்ட சிவ லிங்கேஸ்வரர் அருளாசியைப் பெற்றனர்.
பிற்பகல் 3.30 மணிக்கு ரத்ர ஹோமம், மகா அபிஷேகம், தீபாரதனை, வசந்த மண்டப பூஜை மற்றும் அபிஷேகம் ஆகிய நிகழ்வுகள் ஆலயத்தின் தலைமை குருக்கள், ஆனந்தன் சிவாச்சாரியார் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இரவு 7.31 மணிக்கு மகா சிவராத்திரி முதல் கால பூஜைக்கான யாகம், 108 சிவலிங்க கலச குடம் எடுத்தல் மற்றும் அபிஷேகம் ஆராதணை நடைபெற்றது.
அதன் பின்னர் இரண்டாம் கால பூஜை இரவு மணி 11.30 க்கும், மூன்றாம் கால பூஜை அதிகாலை 2.30 மணிக்கும், நான்காம் கால பூஜை காலை 4.30 மணிக்கும் விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, சிவராத்தி நிகழ்விற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா வெகுசிறப்பாக நடைபெறுவதற்கு எல்லா நிலைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய நன்கொடையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஆலயத் தலைவர் சத்திய மூர்த்தி முனியாண்டி ஆலய நிர்வாகக் குழு சார்பில் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மறுநாள் வியாழக்கிழமை, இரத ஊர்வலம் மற்றும் பொன்னூஞ்சல் நிகழ்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.