பட்டர்வொர்த், மார்ச்.01-
பினாங்கு, நெகிழிப்பை இல்லாத ஒரு மாநிலமாக உருவாக்கும் நோக்கில் நெகிழிப்பை இல்லாத பிரச்சாரத்தை மாநில அரசாங்கம் இன்று மார்ச் முதல் தேதி தொடங்கியது.
இப்பிரச்சாரம் தொடங்கப்பட்டது மூலம் பயனீட்டாளர்கள் தங்கள் பொருட்களை வாங்குவதற்கு ஒரு முறைக்கு மேலாக பயன்படுத்தக்கூடிய பைகளை மட்டுமே பயன்படுத்துவதற்கு இன்று முதல் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
நெகிழிப்பை வேண்டாம் 2.0 என்று இந்த பிரச்சாரத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள், ஹைப்பர் மார்க்கெட்டுகள், துரித உணவகங்கள், பெட்ரோல் நிலைய கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பிற வணிக வளாகங்களில் பல முறை பயன்படுத்தக்கூடிய பைகளின் பயன்பாடு பெரியளவில் ஊக்கவிக்கப்பட்டுள்ளது.