குளுவாங், மார்ச்.01-
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஜோகூர், குளுவாங் வட்டாரத்தில் அடுத்தவருக்குச் சொந்தமான ATM கார்ட்டைப் பயன்படுத்தி வந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனது ஏடிஎம். கார்டு காணாமல் போனதாக அன்றைய தினமே ஆடவர் ஒருவர் போலீஸ் புகார் செய்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, அந்த ATM கார்ட்டை பயன்படுத்தி பல பொருட்களை வாங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
மாவட்ட வர்த்தக போலீஸ் குழு விரைந்து செயல்பட்டதில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.