ஜார்ஜ்டவுன், மார்ச்.01-
17 ஆவது ஆண்டாக எடிசன் அவார்ட்ஸ் (Edison Awards) விருதளிப்பு விழா, வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி பினாங்கு, Spice Arena அரங்கில் மாலை 5 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
இந்த மாபெரும் விருதளிப்பு விழாவில், 2024 ஆம் ஆண்டு வெளியீடு கண்ட திரைப்படங்களின் நடிகர்கள், நடிகைகள், இயக்குநனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள் உட்பட 33 பிரிவுகளில் திரை நட்சத்திரங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படவிருக்கின்றனர்.
முதல் முறையாக பினாங்கில் நடைபெறவிருக்கும் இந்த எடிசன் அவார்ட்ஸ் விருதளிப்பு விழா தொடர்பாக இன்று சனிக்கிழமை பினாங்கில் அதன் அறிமுக விழா, சிறப்பாக நடைபெற்றது.
எடிசன் அவார்ட்ஸ் விருதளிப்பு விழா, ஒரு வெற்றிகரமான நிகழ்வாக அமைவதற்கு அனைவரும் கலந்து கொள்ளும்படி விருதளிப்பு விழாவிற்கு தலைமையேற்கவிருக்கும் பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிகழ்விற்கான நுழைவு கட்டணம் மலேசியா ரிங்கிட் 99, 199, 299 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள வேளையில், Platinum Table 6,000 ரிங்கிட், Gold Table 5,000 ரிங்கிட், Silver Table 3,000 ரிங்கிட் என தற்போது விற்கப்பட்டு வருவதாக Edison Awards விருது குழுத் தலைவர் J. செல்வகுமார் விவரித்தார்.
எடிசன் அவார்ட்ஸ் பெருமைக்குரிய ஒரு விருதளிப்பு விழா என்று இன்று நடைபெற்ற அறிமுக விழாவிற்கு சிறப்பு வருகை தந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் சதீஸ் புகழாரம் சூட்டினார்.
விருதளிப்பு விழாவிற்கான நுழைவு சீட்டை www.myticket.asia என்ற இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.