கோலாலம்பூர், மார்ச்.01-
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கள்ளப் பணம் பரிமாற்றம் தொடர்பில் தனது விசாரணையை முடுக்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் மீண்டும் விசாரணை நடத்தலாம் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.
65 வயதான இஸ்மாயில் சப்ரி, ரத்தக் கொதிப்புக்கு ஆளாகி மயங்கி, கீழே விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்புதான் அவரிடம் எஸ்பிஆர்எம், 5 மணி நேரம் விசாரணை செய்துள்ளது.
இஸ்மாயில் சப்ரியின் நான்கு முன்னாள் உதவியாளர்களை எஸ்பிஆர்எம் கைது செய்தது, அந்த நால்வரில் ஒருவரின் வீட்டில் 100 மில்லியன் பெறுமானமுள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டது தொடர்பில் அந்த முன்னாள் பிரதமர் மீண்டும் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்படலாம் என்று எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.