தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. கடந்த ஆண்டு அரண்மனை 4 திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இவர், மதகஜராஜா படத்தின் மூலம் இந்த ஆண்டின் முதல் வெற்றியைப் பெற்றுள்ளார்.
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மிகவும் பரபரப்பாக வலம் வரும் சுந்தர் சி கைவசம் தற்போது கேங்கர்ஸ் மற்றும் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில், அடுத்து சுந்தர் சி. இயக்கவிருக்கும் படம் குறித்து ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, சுந்தர் சியும் நடிகர் கார்த்தியும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது சுந்தர். சி, கார்த்தியிடம் கதை ஒன்றை சொல்ல அந்த கதை கார்த்திக்கு மிகவும் பிடித்து விட்டதாம். அதனால் கார்த்தி சுந்தர் சி இயக்கத்தில் விரைவில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரலாம்.