கோலாலம்பூர், மார்ச்.02-
நாட்டின் இரண்டாம் நிலை ஆண்கள் இரட்டையர்களான ஆரோன் சியா-சோ வூய் யிக், ஆரோனின் வலது மணிக்கட்டில் மீண்டும் மீண்டும் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமை தொடங்கும் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் விளையாடுவார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இருப்பினும், அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் கவலைக்குரியது அல்ல என தேசிய தேசிய ஆடவர் இரட்டையர் பிரிவு தலைமைப் பயிற்சியாளர் ஹெர்ரி இமான் பியர்ங்காடி கூறியுள்ளார்.
“அதைப் பற்றி என்னால் பதிலளிக்க முடியாது, ஏனென்றால் அவர் (ஆரோன்) அங்கு எப்படி இருக்கிறார் என்பதை நான் பார்க்க வேண்டும். மாஸ்டர்ஸ் ஆர்லியன்ஸில் விளையாட வாய்ப்பிருக்கலாம்,” என்று அவர் அண்மையில் கூறினார்.
ஆரோன்-வூய் யிக் ஜோடியின் முக்கிய இலக்காக ஆல் இங்கிலாந்து உள்ளது என்றும் மார்ச் 11 ஆம் தேதி தொடங்கிய போட்டியில் அவர்கள் பங்கேற்பதில் பிரச்னை ஏதும் இருக்காது என்றே தாம் கருதுவதாக ஹெர்ரி கூறினார்.
ஆரோன்-வூய் யிக்கிற்கு இலக்கு இன்னும் உள்ளது. ஆனால் அது அடையப்படுகிறதா இல்லையா என்பது இங்கிலாந்தில் அவர்களின் நிலைமையைப் பொறுத்தது. கடந்த ஆண்டு அவர்கள் இறுதிப் போட்டியை எட்டினர். “ஆரோனின் நிலைமை நன்றாக இருந்தால், குறைந்தபட்சம் அவர்கள் மீண்டும் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
பிரான்சில் உள்ள ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் ஆல் இங்கிலாந்துக்கு முன் நடைபெறும் ஒரு முக்கியமான பயிற்சிப் போட்டியாகக் கருதப்படுகிறது. ஆரோன்-வூய் யிக் 2019 ஆம் ஆண்டிலும் கடந்த ஆண்டிலும் ஆல் இங்கிலாந்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.