கோலாலம்பூர், மார்ச்.02-
உலக சந்தையில் மலேசிய பொருட்களின் நம்பகத்தன்மையையும் போட்டித்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கில், ஹலால் தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கும் என்று KK Supermart & Superstore Sdn Bhd கருதுகிறது. இதன் காரணமாக, ஹலால் ஒருமைப்பாடு தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கும் ஹலால் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட KK Supermart நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் தொடக்கமாக, நிறுவனத்தின் 34 ஊழியர்கள் ஹலால் தொழில்துறை அடிப்படைப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
மேலும், நிறுவனத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள ஊழியர்களுக்கு ஹலால் தொடர்பான விழிப்புணர்வு தேவை என்பதை உணர்ந்து, இதற்கான பயிற்சிகளை வழங்கவும், மலேசியாவை உலகளாவிய ஹலால் மையமாக மாற்றும் அரசாங்கத்தின் முயற்சியை ஆதரிக்கவும் கே.கே சூப்பர் மார்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில், கே.கே சூப்பர் மார்ட் நிறுவனமும் HDCயும் இணைந்து பல்வேறு பயிற்சி, ஆலோசனைத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும்.