யாரும் பாரபட்சமாக நடத்தப்படுவதில்லை

கோலாலம்பூர், மார்ச்.02-

கையூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் யாரையும் பாரபட்சமாக நடத்துவதில்லை, யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை என்று அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி கூறியுள்ளார். பத்திரிகையாளராக அல்லது அரசியல்வாதி என யாராக இருந்தாலும் சரி, அவர்கள் குற்றம் செய்தால், எந்த விதிவிலக்கும் செய்யப்படாது என்றார்.

வெளிநாட்டுத் தொழிலாளர் முகவர்கள், நாட்டின் நுழைவாயில்களில் உள்ள குடிநுழைவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கையூட்டு குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை எஸ்பிஆர்எம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாஸ் விடுத்த அழைப்பு குறித்து அஸாம் பாக்கி இவ்வாறு கூறினார். இந்த பிரச்சினையைப் பற்றி புகாரளிக்கும் பத்திரிகையாளர்களைக் கைது செய்வதை விட இது முக்கியமானது என்று பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS