குளுவாங், மார்ச்.02-
இன்று அதிகாலை ஜோகூர், கோத்தா திங்கி-குளுவாங் சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். காலை 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக குளுவாங் மாவட்ட காவல்துறை தலைவர் அசிஸ்டன் கொமிஷனர் பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார். 39 வயதான தாதியரான அந்தப் பெண்மணி ஓட்டி வந்த பெரோடுவா ஆக்சியா காரும் Proton Saga FL காரும் நேருக்கு நேர் மோதியுள்ளன. புரோட்டான் சாகா எதிர் திசையில் இருந்து வந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பெரோடுவா ஆக்சியா மீது மோதியது.
புரோட்டான் சாகாவின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 52 வயது பெண்ணுக்கு தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற நான்கு பேர், ஓட்டுநர்கள் உட்பட, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாலை நிலை, வானிலை, சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.