பத்து வயது சிறுவன் காஸ் சிலிண்டர் வெடித்ததில் காயம்

துவாரான், மார்ச்.02-

10 வயது சிறுவன் ஒருவன் இன்று மாலை சபா, Kampung Berungisஸில் உள்ள தனது வீட்டு சமையலறையில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்தான். துவாரான் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் உதவித் தலைவர் முகமட் நோர் அமிட் கூறுகையில், பிற்பகல் 2.32 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் பொதுமக்களால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்தை அந்த தீயணைப்புப் படையினர் கண்டறிந்தனர்.

தொடக்க கட்ட விசாரணையின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டிருக்கலாம். அப்போது தனியாக இருந்த சிறுவன் குளிர்சாதனப் பெட்டியின் சாக்கெட்டை இயக்கியதால் தீப்பொறி ஏற்பட்டு வெடிப்பு ஏற்பட்டது. தற்போது அந்த சிறுவன் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு துவாரான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மேலும், பிற ஆபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

WATCH OUR LATEST NEWS