மருத்துவ அதிகாரி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

ஜார்ஜ்டவுன், மார்ச்.02-

கடந்த புதன்கிழமை அன்று பணியிடத்தில் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் புகாரில் விசாரணைக்கு உதவ கைது செய்யப்பட்ட மருத்துவ அதிகாரி இன்று ஞாயிற்றுக்கிழமை அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 43 வயதான மருத்துவருக்கு எதிரான காவலில் வைக்கும் உத்தரவு இன்று முடிவடைந்த பிறகு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை அறிக்கையை தயார் செய்து வருவதாக தீமோர் லாவுட் மாவட்டக் காவல் துறைத் துணைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் லீ சுவீ சாகே தெரிவித்தார்.

இந்த விசாரணை அறிக்கை புக்கிட் அமானுக்கு அனுப்பி வைக்கப்படும், பிறகு அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS