2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழுக்கு வரும் சமந்தா

மாடலிங் துறையில் மிக குறைந்த சம்பளம் பெறத் தொடங்கி இப்போது பல கோடி சம்பளம் பெறும் நடிகையாகவும் பலருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் முதலாளியாக உயர்ந்துள்ளார் நடிகை சமந்தா.

நடிப்பு, தொழில் என பரபரப்பாக வலம் வந்தவருக்கு பெரிய தடையாக அமைந்தது மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு. நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் இப்போது தான் கொஞ்சம் அதில் இருந்து மீண்டுள்ளார். இதனால் சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில், அண்மையில் இவர் நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது.

அதை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க முடிவு செய்து அதற்கான கதைகளையும் கேட்டு வருகிறாராம். ஒரு சில நல்ல கதைகளை தேர்வு செய்கிறாராம். எனவே, இவர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.   

WATCH OUR LATEST NEWS