மான்செஸ்டர், மார்ச்.03-
மான்செஸ்டர் யுனைடெட்டின் மோசமான பருவம் தொடர்கிறது. எஃபே கிண்ண நடப்பு சாம்பியனான மான் யு ஐந்தாவது சுற்றில் ஃபுல்ஹாமிடம் பெனால்டியில் 4-3 என தோல்வி கண்டது. அதனை அடுத்து மான் யு எஃபே கிண்ணத்தில் இருந்து வெளியேறியது.
13 முறை FA கிண்ணத்தை வென்றுள்ள மான் யு, கடந்த இரண்டு பருவங் இறுதியாட்டத்திற்குச் சென்று கடந்த பருவத்தில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
யுனைடெட் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளது என அதன் நிர்வாகி ரூபன் அமோரிம் குறிப்பிட்டுள்ளார். ஃபுல்ஹாமுடனான தோல்வி அந்த போர்ச்சுகல் பயிற்சியாளருக்கு அண்மைய அடியாகும். அவர் கடந்த நவம்பரில் பணி நீக்கம் செய்யப்பட்ட எரிக் டென் ஹாக்கின் இடத்தை நிரப்பினார்.
யுனைடெட் அடுத்து இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் அர்செனலைச் சந்திக்கிறது. வியாழக்கிழமை யூரோபா லீக் சுற்று 16 இன் முதல் கட்ட ஆட்டத்தில் யுனைடெட் ரியல் சோசிடாட்டை எதிர்கொள்கிறது.