மேற்கு ஜாவாவில் போகோரில் வெள்ளம், ஒருவரைக் காணவில்லை

ஜகார்த்தா, மார்ச்.03-

இந்தோனேசியா, மேற்கு ஜாவா, போகோர் எனுமிடத்தில் சில பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்று தொடங்கி பெற்று வரும் அடை மழையால் சிமான்செயுரி ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்நிலை காணப்படுகிறது. வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ளன. ஒருவரைக் காணவில்லை என மேற்கு ஜாவா மாவட்ட பேரிடர் நிர்வாக மன்றம் அறிவித்துள்ளது.

அந்நபர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மீட்புப் படையினர், ஊராட்சித் துறையினர், தன்னார்வலர்கள் என பலரும் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வேளையில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதோடு பள்ளியொன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS