புத்ராஜெயா, மார்ச்.04-
போலிப் பத்திரங்களைச் சமர்ப்பித்தக் குற்றத்திற்காக தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து சபா முன்னாள் கட்டமைப்பு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பீட்டர் அந்தோணி செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
பீட்டர் அந்தோணிக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுச் சிறைத் தண்டனையை நிலைநிறுத்திய அப்பீல் நீதிமன்றம், அவரை சிறைக்குக் கொண்டுச் செல்லும்படி உத்தரவிட்டது.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, சபா மலேசிய பல்கலைக்கழகத்தின் பராமரிப்பு மற்றும் சேவைப் பணிகளுக்கான குத்தகை தொடர்பில் போலி பத்திரங்களைத் தயார் செய்து சமர்ப்பித்ததற்காக அந்த முன்னாள் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை நிலை நிறுத்தப்பட்டதுடன் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.