விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. டீசர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. Youtube-ல் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனையும் படைத்தது. இப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கப்போகும் அவருடைய 64வது படம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
ஆனால், விஷ்ணு வர்தன், சிறுத்தை சிவா, பிரஷாந்த் நீல் போன்ற இயக்குநர்களின் பெயர்களும் இதில் அடிபட்டு வருகிறது. இந்த நிலையில், முன்னணி நடிகரும், பிரபல இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் தான் AK 64 திரைப்படம் உருவாகப் போவதாக அண்மைய தகவல் வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்துடன் இட்லி கடை படம் வெளியாவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த வெளியீட்டு தேதியில் இருந்து இட்லி கடை தள்ளிப் போய் விட்டதாம். மேலும் அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்கப் போவதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் துவங்கும் என்றும் பேச்சு எழுந்துள்ளது.
மேலும், இப்படத்தை தனுஷின் Wunderbar நிறுவனம் தயாரிக்கும் என்றும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.