பெட்டாலிங் ஜெயா, மார்ச்.04-
ஜெஃபர் ரோசோபின் பதவி விலகியுள்ள நிலையில், புதிய மகளிர் ஒற்றையர் பிரிவுப் பயிற்சியாளரை நியமிக்க ஒற்றையரொ பிரிவு தலைமை பயிற்சியாளர் கென்னத் ஜோனாசென் அவசரப்பட மாட்டார். நான்கு மாதங்கள் பெண்கள் ஒற்றையர் பிரிவு வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஜெஃபர் கடந்த மாத இறுதியில் மலேசிய பூப்பந்து சங்கத்திலிருந்து (BAM) வெளியேற முடிவு செய்தார்.
கடந்த நவம்பரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பயிற்சியாளர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு முன்பு அந்த இந்தோனேசியர் ஒரு வருடம் ஜூனியர் தலைமை பயிற்சியாளராக இருந்தார். ஜெஃபரின் திடீர் விலகல் பயிற்சி அமைப்பில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் புதிய பயிற்சியாளரை பணியமர்த்துவதில் அவசர முடிவை எடுக்கமாட்டேன் என்று கென்னத் ஒப்புக் கொண்டார்.
ஜெஃபருக்குப் பதிலாக ஒருவரைத் தேடுவதாகவும் கென்னத் கூறினார். இப்போதைக்கு, புதிய பயிற்சியாளர் பணியமர்த்தப்படும் வரை மகளிர் ஒற்றையர் பிரிவு உதவிப் பயிற்சியாளர் மிஸ்பன் ரம்தானுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படவுள்ளது.