மருத்துவமனையில் பாடகி கல்பனா- அவரது மகள் வெளியிட்டுள்ள தகவல்

பிரபல பாடகி கல்பனா வீட்டில் மயங்கிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து அவரது மகள் பேசியிருப்பது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல பாடகி கல்பனா வீட்டில் மயங்கிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டிருந்தார். அவர் பின்னர் போலீசாரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதை தொடர்ந்து போலீசார் இவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணை மூலம் தெரியப்படுத்தினார்கள். இந்த விசாரணையில் சென்னையில் இருந்த அவரது கணவர் பிரசாத்தையும் வரவைத்து போலீசார் விசாரித்தனர்.

பின்னர் இவரது மகள் தயா பிரசாத்தையும் விசாரித்தனர். இந்நிலையில், கல்பனா தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கவில்லை, அதிகப்படியான மாத்திரைகளே அவர் மயங்கியதற்கு காரணம் என அவரது மகள் கூறியிருக்கிறார். தங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அம்மா உடல்நிலை குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வேளையில் கல்பனாவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், மயக்க நிலையில் மருத்துவமனைக்கு வந்ததால் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்தோம். இப்போது கல்பனா சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS