அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் ஆரோன் சியா- வூய் யிக் விளையாடுவது இன்னும் உறுதியாகவில்லை

கோலாலம்பூர், மார்ச்.06-

இம்மாதம் 11 ஆம் தேதி தொடங்கவிருக்கும் அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் நாட்டின் அனுபவமிக்க ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டக்காரர்களான ஆரோன் சியா-சோ வூய் யிக் ஜோடி பங்கேற்பது கேள்விக் குறியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் முதல் சுற்றில் சீன இளம் ஜோடியான சன் வென் ஜுன்-ஜு யி ஜூன் 18-21, 8-21 என்ற செட் கணக்கில் உலகின் முன்னாள் வெற்றியாளர்களான அவர்கள் தோல்வியுற்றனர். 
 
ஆரோனின் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் சிறந்த அளவில் விளையாட முடியவில்லை என்று தேசிய ஆண்கள் இரட்டையர் பிரிவு தலைமை பயிற்சியாளர் ஹெர்ரி இமான் பியர்ங்காடி தெரிவித்தார். எனவே, ஆரோன்-வூய் யிக்கின் உண்மையான நிலவரத்தைத் தெரிந்து கொள்ள, பிரான்சில் இருக்கும் பயிற்சியாளர் முஹம்மது மிஃப்தாக்கின் அறிக்கைக்காக ஹெர்ரி காத்திருப்பார். 

அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியிலவ அவர்கள் விளையாடலாமா வேண்டாமா என்பதை அறிய முஹம்மது மிஃப்தாக்கின் அறிக்கைக்காக ஆல் இங்கிலாந்துக்காக காத்திருக்கிறேன். இப்போதைக்கு அது சாத்தியமா இல்லையா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை,” என்று அவர் கூறினார். 

WATCH OUR LATEST NEWS