கோலாலம்பூர், மார்ச்.06-
புனித ரமலான் மாதத்தையொட்டி அந்த உன்னத மாதத்தைப் போற்றும் வகையில் AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அருண் மசாலா நிறுவனம் வடிவமைத்துள்ள டீசர் ஒன்று, சமூக வலைத்தளங்களில் மக்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியுள்ளது. பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

முற்றிலும் மாறுப்பட்ட நிலையில், புத்தாக்க சிந்தனையுடன் இப்படியொரு தனித்துவமான டீசரை ரமலான் மாதத்தையொட்டி வெளியிட்ட முதலாவது நிறுவனமாக அருண் மலாசா விளங்குகிறது.

ரமலான் சந்தையில் மக்கள் திரண்டுள்ள காட்சி, மசாலா நறுமணங்கள் மற்றும் அதன் சுவை மேலோங்கியிருக்கும் சூழல், ரமலான் சந்தையின் உணர்வை மிஞ்சுவதற்கு எதுவுமே இல்லை என்பதை அருண் மசாலாவின் 11 வினாடிகள் கொண்ட அந்த டீசர் சித்திரிக்கிறது.
சுடச் சுட Satay-க்கள் முதல் மணமிக்க Ayam Rendang குழம்பு , சுவையான Ikan Bakar என ஒவ்வொரு உணவு வகையும் அருண் மசாலாவை நாவில் உச்சரிக்க வைக்கிறது.

அருண் மசாலா பாரம்பரியத்தின் சுவை, ரமலானின் உணர்வு, இந்த அழகான நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் கொண்டாடப்படுகிறது