வானொலி அறிவிப்பாளர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கை – சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிப்பு

கோலாலம்பூர், மார்ச்.06-

மற்ற மதத்தினரின் சமயச் சடங்குகளை கேலி செய்து, நிந்தித்தாகக் கூறப்படும் ஏரா எப்ஃஎம் வானொலி நிலையத்தைச் சேர்ந்த அறிவிப்பாளர்களுக்கு எதிராக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை, இன்று சட்டத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

தைப்பூசக் காவடி முழுக்கத்தைக் கேலி செய்து, கிண்டல் அடித்து காணொளி வெளியிட்ட அந்த தனியார் வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர்களுக்கு எதிராக இது வரையில் 73 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

இதுவரையில் மூன்று அறிவிப்பாளர்கள் மற்றும் இதர மூவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர்களை தவிர்த்து வேறு யாரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை என்று டான்ஶ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.

அந்த அறிவிப்பாளர்களுக்கு எதிரான புகார்கள், குற்றவியல் சட்டம் 233 பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டதையும் ஐஜிபி விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS